Wednesday, April 21, 2010

முன்மொழியும் பின்மொழியும்


அறஞ்செய விரும்பு.
அன்பு வழியில் திரும்பு.

இயல்வது கரவேல்.
ஈகையை மறவேல்.

சனி நீராடு.
சமாதனதிற்குப் போராடு.

இணக்கமறிந்து இணங்கு.
வணக்கமறிந்து வணங்கு.

நன்றி மறவேல்.
நல்லாரைத் துறவேல்.

கூடிப் பிரியேல்
கொடியருடன் திரியேல்.

நெற்பயிர் விளை.
புற்பயிர் களை.

வல்லமை பேசேல்.
வையகத்தாரை ஏசேல்.

பிழைபடச் சொல்லேல்.
பழிபட நில்லேல்.

நைவினை நணுகேல்.
பொய்வினை அணுகேல்.

நூல் பல கல்.
நூல் வழி நில்.

Wednesday, April 14, 2010

ஒற்றுமையின் பலம்

சில புறாக்கள் இரை தேடி பறந்து திரிந்தன. இறுதியில் ஓர் இடத்தில் அரிசி
மணிகள் சிதரிக்கிடப்பதைக் கண்டன. ஆர்வதுடனே அங்கே இறங்கி அமர்ந்தன. அரிசியை பொறுக்கி திண்ண தொடங்கின.
திடீரென ஒரு வலை அவைகளின் மீது விழுந்தது.அதில் அவை சிக்கிக் கொண்டன வலையை வைத்திருந்த வேடன் வேகமாக வந்து கொண்டிருந்தான். அவை பயந்து மனம் கலங்கின. அவைகளின் தலைவனுக்கு ஒரு தைரியம் உண்டாயிற்று. பயபடாதீர்கள் . வலையை அப்படியே கவ்விப்பிடித்து ஒற்றுமையாய் பறந்து செல்வோம் என்று உத்தரவு போட்டது. அதன் படியே புறாக்கள் வலையை அலகால் பிடித்துகொண்டு ஒற்றுமையாய் பறந்து சென்றன.வேடன் பின் தொடர்ந்து ஓடிப் பாத்தான்.முடியவில்லை.
ஒரு எலியின் வளை அருகே அவை தரை இறங்கின . எலி வெளியே வந்து தன் கூறிய பற்களால் வலையை கடித்து புறாக்களை விடுவித்தது. அவை எலிக்கு நன்றி சொல்லிவிட்டு உற்சாகமாக மீண்டும் பறந்து சென்றன.

ஒற்றுமையே பெலன். பார்த்தீர்களா?