
அறஞ்செய விரும்பு.
அன்பு வழியில் திரும்பு.
இயல்வது கரவேல்.
ஈகையை மறவேல்.
சனி நீராடு.
சமாதனதிற்குப் போராடு.
இணக்கமறிந்து இணங்கு.
வணக்கமறிந்து வணங்கு.
நன்றி மறவேல்.
நல்லாரைத் துறவேல்.
கூடிப் பிரியேல்
கொடியருடன் திரியேல்.
நெற்பயிர் விளை.
புற்பயிர் களை.
வல்லமை பேசேல்.
வையகத்தாரை ஏசேல்.
பிழைபடச் சொல்லேல்.
பழிபட நில்லேல்.
நைவினை நணுகேல்.
பொய்வினை அணுகேல்.
நூல் பல கல்.
நூல் வழி நில்.
தங்களின் படைப்புகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது தங்களை தொடர்பு கொள்ள வேண்டும் ஆனால் மின்னஞ்சல் இல்லை.. தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள் என் வலையின் மூலம் உங்கள் ஆக்கங்களின் சிலவற்றை நமது தோட்டத்திலும் வெளியிட்டுள்ளேன்.. தாங்கள் விரும்பினால் நீங்களே உங்கள் பதிவுகளை வெளியிடலாமே>..
ReplyDelete