Friday, October 5, 2012

திருக்குறள் அதிகாரம் 25

துறவறவியல்

அருளுடமை



241.

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன;(உயர்ந்தவரிடத்தில்  மட்டும் உள்ள)  அருளாகிய செல்வமே செல்வங்களில்  சிறந்த  செல்வமாகும். 

242.

நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்
தேரினும் அஃதே துணை.

நல்ல வழியால் ஆராய்ந்து  அருளுடையவர்களாக விளங்க  வேண்டும்.  பலவழிகளால்  ஆராய்ந்து  கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக  உள்ளது. 
  

243.

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.

அறியாமையாகிய இருள் பொருந்திய துன்பஉலகில் இருந்து வாழும்   வாழ்க்கை,  அரும் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.  
 

244.

மன்நுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.

 தன உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கிற தீவினை, உலகில்  நிலைபெற்றுள்ள  மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.



245.

அல்லல் அருளாள்வாற்கு இல்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலங் கரி.

அருளுடையவராக வாழ்கின்றவர்க்குத் துன்பம் இல்லை; காற்று  இயங்குகின்ற வளம் பொருந்திய பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்கு சான்று ஆவார்.    


246.

ள் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

 அருள் இல்லாதவராய் அறமல்லாதவகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிபோலாகிய அறத்திலிருந்துநீங்கித்  தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர்  என்பர்.


247,

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

பொருள் இலாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறுபோல, உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.  

248.

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.

பொருள் இல்லாதவர்   ஒரு காலத்தில் வளம் பெற்றுவிளங்குவர்; அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயன் அற்றவரே;அவர் ஒரு காலத்திலும்
சிறந்து  விளங்குதல் இல்லை.   


249.

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றலால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.

 
அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச் செயலை ஆராய்ந்தால், அஃது  அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக்  கண்டாற்  போன்றது.  


250.

வலியார்முன் தன்னை நினைக்காதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.

 அருள் இல்லாதவன் தன்னைவிட மெலிந்தவர் மேல் துன்புறுத்தச்  செல்லும்போது,  தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும்  நிலைமையை  நினைக்கவேண்டும். 

Tuesday, August 28, 2012

திருக்குறள் அதிகாரம் 24

புகழ்


231 .


ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு.
   
 
வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும். அப் புகழ அல்லாமல்  உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.


232 .


உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று

ஈவார்மேல் நிற்கும் புகழ்.


புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.
 
233 .


ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

பொன்றாது நிற்பதொன் றில்.
 
 
உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலை நிற்கவல்லது வேறொன்றும் இல்லை.



234 .


நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு.
 
 நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது.   



235 .

நந்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க் கல்லால் அரிது.
 
 
புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும், அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.




236 .


தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.

 
ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும்; அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்கு தோன்றுவதை விடத் தோன்றாமலிருப்பது  நல்லது.    



237 .
 
புகழ்பட வாழாதார் தந்நோ வார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.
 
 
தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்துகொள்ளாமல் தம்மை இகழ்கின்ற வரை நொந்துகொள்ளக் காரணம் என்ன?
 
238 .


வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்

எச்சம் பெறாஅ விடின்.
 
தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகிய புகழைப் பெறா விட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.


239 .


வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம்.

 
புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.


240 .



வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய

வாழ்வாரே வாழா தவர்.

 
   தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர்; புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.

Sunday, July 1, 2012

திருக்குறள் அதிகாரம் 23

                                     ஈகை



221.

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறயெதிர்ப்பை நீர் துடைத்து.


வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது,
மட்டவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை எதிர்பார்த்துக்
கொடுக்கும்  தன்மை  உடையது.


222.

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.


பிறரிடமிருந்து பொருள் பெற்றுக்கொள்ளுதல் நல்ல நெறி  என்றாலும்  கொள்ளல்  தீமையானது. மேலுலகம் இல்லை  என்றாலும்
பிறர்க்குக் கொடுப்பதே நல்லது.


223.

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.


 யான் வறியன்' என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்குக் கொடுக்கும் தன்மை, நல்ல குடிப்பிறப்பு  உடையவனிடம்  உண்டு.



224.

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு.


 பொருள் வேண்டும் என்று இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும்  
வரைக்கும்  (இரத்தலைப் போலவே) இரந்து  கேட்கப் படுவதும் 
துன்பமானது.



225.

ஆற்றுவார் ஆற்றல்  பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.


தவ வலிமை உடையவரின் வலிமை பசுயைப் பொறுத்துக்
கொள்ளலாகும்.  அதுவும் அப் பசியை உணவு கொடுத்து
மாற்றுகின்றவரின்  ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.  



226.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.



வறியவரின்  கடும் பசியைத் தீர்க்கவேண்டும்; அதுவே பொருள் பெற்ற
ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து
வைக்கும் இடமாகும்.



227.

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.


தான் பெற்ற உணவைப் பலரோடும் பகுத்து உண்ணும்   பழக்கம்
உடையவனைப் பசி என்று கூறப்படும் தீய நோய் அணுகுதல்  இல்லை.



228.

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.


தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் வைத்திருந்து
பின் இழந்து விடும் வன்கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து
மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ?  



229.

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.


பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்காக  உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே   தமியராய் உண்பது வறுமையால் இரப்பதைவிடத் துன்பமானது.
230.

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.

சாவதவிடத் துன்பமானது வேறொன்றும் இல்லை.  ஆனால்  
வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாத நிலை வந்தபோது அச்சாதலும் இனியதே ஆகும்.
 
 
 

Wednesday, March 7, 2012

திருக்குறள் அதிகாரம் 22

ஒப்புரவு அறிதல்

211 .    

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றுங் கொல்லோ உலகு.



இந்த உலகத்தார் தமக்கு உதவும் மழைக்கு என்ன கைம்மாறு செய்கின்றனர்?  மழை போன்றவர் செய்யும்  உதவிகளும் கைம்மாறு வேண்டாதவை.
  

212 .  

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.


ஒப்புரவாலன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.

213 .  

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் ல்ல பிற.



பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப்போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத்  தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.

214 .  


ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள்  வைக்கப்படும்.


ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான்;  மற்றவன் செத்தவருள்   சேர்த்துக்  கருதப்படுவான்.  

215 .   


ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.


ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின்  செல்வம், ஊரார் நீருண்ணும் குளம், நீரால் நிறைந்தாற்  போன்றது.

216 .  


பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.



ஒப்புரவாகிய நற்பண்பு உடையவனிடம்  செல்வம் சேர்ந்தால்  அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற்  போன்றது.

217 .   


மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.



ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடம் செல்வம் சேர்ந்தால், அஃது எல்லா உறுப்புகளும் மருந்தாகிப் பயன் படத் தவறாத மரம் போன்றது.

218 .  


இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.


ஒப்புரவு அறிந்து ஒழுகுதாகிய தம் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வவளம்  இல்லாத காலத்திலும்  ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.   

219 .  


நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர்
செய்யாது அமைகலா வாறு.


ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல்,  செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற   தன்மையாகும்.

220 .   


ஒப்புரவினால்வரும் கேடெனில் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து



ஒப்புரவால் கேடு வரும் என்றால், அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளும் தகுதி உடையதாகும்.

Tuesday, March 6, 2012

திருக்குறள் அதிகாரம் 21

தீவினை அச்சம்


201.
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவார்
தீவினை என்னும் செருக்கு.
    
தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை  உடைய பாவிகள் அஞ்சார்;  தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.
 
 
202 . 
       தீயவை தீய பயத்தலாலான் தீயவை
 தீயினும் அஞ்சப் படும்.


தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையவனாக இருத்தலால்,  அத் தீய செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.
 
 
203 .  
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.


தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச்  செய்யாமலிருத்தலை, அறிவு  எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறப்படும். 
 
 
204 .
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.
பிறனுக்கு கேட்டைத் தரும் தீயசெயல்களை ஒருவன்மறந்தும்  எண்ணக்  கூடாது.  எண்ணினால்  எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு  அறம்  எண்ணும்.  
205  
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.
யான் வறியவன்' என்று நினைத்துத் தீயசெயல்களைச்  செய்யக்கூடாது; செய்தால்  மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.   



206 .  
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேன்டா தான்.


துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன்,  தீய செயல்களைத் தான் பிறருக்குச்  செய்யாமலிருக்க வேண்டும்.
 
 
207 .  
எனைப்பகை யுற்றாகும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும்; ஆனால் தீயவை செய்தால் வரும் தீ- வினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.
 
 
 
208 .  
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது பின்சென்று அடும்.

தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல் ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது. 



209 .  
தன்னைத்தான் காதலனாமின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினை பால்.
ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழபவனாயின்,தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.
 
 
210 . 
அருங்கேடன் என்பது  அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.


ஒருவன் தவறான நெறியில் சென்று தீய செயல் செய்யாதிருப்பானானால்  அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.  

Saturday, March 3, 2012

திருக்குறள் அதிகாரம் 20



பயனில சொல்லாமை



191 .    பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
            எல்லாரும் எள்ளப் படும்.




கேட்டவர்  பலரும்  வெறுக்கும் படியாகப் பயனில்லாத  சொற்களைச்  சொல்லுகின்றவன்  எல்லோராலும்  இகழப்படுவான்.


192 .    பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
             நட்டார்கள் செய்தலிற் றீது.
    

 பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல் நண்பரிடத்தில் அறம் இல்லாத செயல்களைச் செய்தலை    விடத் தீமையானதாகும் 


193 .    நயனிலன் என்பது சொல்லும்  பயனில
            பாரித் துரைக்கும் உரை.



 ஒருவன் பயனில்லாத பொருள் களைப் பற்றி விரிவாகச்   சொல்லும்  சொற்கள்  அவன் அறம் இல்லாதவன் என்பதை  அறிவிக்கும்

194 .     நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாரப்
             பண்பில்சொல் பல்லா ரகத்து.



பயனோடு பொருந்தாத  பண்பு  இல்லாத சொற்களை  பலரிடத்தும்  சொல்லுதல் அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்

195 .       சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
               நீர்மை யுடையார் சொலின்



பயனில்லாத  சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவரானால் அவருடைய மேன்பாடு அவர்க்குரிய மதிப் போடு   நீங்கி  விடும்.

196 .      பயனில் சொல் பாராட்டு வானை மகன்எனல்
              மக்கட் பதடி யெனல்.


பயனில்லாத   சொற்களை ப  பல முறையும்  சொல்லுகின்ற  ஒருவனை  மனிதன் என்று சொல்லக்கூடாது;  மக்களுள்    பதர் என்று சொல்ல வேண்டும். 


197 .     நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
             பயனில சொல்லாமை நன்று.



அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம்; சான்றோர்  பயனில்லா  சொற்களைச்  சொல்லாமல் இருத்தல்  நன்மையாகும்

198 .    அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
            பெரும்பயன் இல்லாத சொல்.


அருமையான   பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க  பயன்  இல்லாத சொற்களை   ஒருபோதும் சொல்ல மாட்டார். 
 
199 .      பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார்  மருள்தீர்ந்த
         மாசறு காட்சி யவர்.


மயக்கத்தில் இருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர்  பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்ல மாட்டார்.

200.     சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
       சொல்லிற் பயனிலாச் சொல்.


சொற்களில் பயனுடைய சொற்களை மட்டுமே சொல்ல வேண்டும்;  பயன் இல்லாதவைகளாகிய சொற்களைச் சொல்லவே  கூடாது.  

Friday, March 2, 2012

திருக்குறள் அதிகாரம் 19

 
 
புறங்கூறாமை   
 
 
181 .    அறம்  கூறான் அல்ல  செயினும் ஒருவன் 
             புறம்  கூறான்  என்றல்  இனிது 
 
 
இவன் அறத்தை  போற்றி கூறாதவனாய் அறமல்லாதவற்றை  செய்தாலும்  மற்றவனைப் பற்றி புறம் கூறாமல் இருக்கிறான்  என்று  சொல்லப்படுதல்  நல்லது. 
 
 
182 .     அறன் அழிஇ  அல்லவை  செய்தலின்  தீதே
              புறன்      அழி இப்    பொய்த்து  நகை 
 
 
  அறத்தை அழித்து பேசி அரமல் லா தவைகளைச்   செய்தலை விட 
ஒருவன்  இல்லாதவிடத்தில்  அவனைப் பழித்துப்  பேசி  நேரில் பொய்யாக முகமல்ர்ந்து  பேசுதல்  தீமையாகும்    
 
 
183 .    புறம் கூறிப் பொய்த்து உயி ர்  வாழ்தலின் சாதல்  
             அறம் கூறும் ஆக்கம்  தரும்
 
 
   புறங் கூறிப் பொய்யாக நடந்து உயிர்  வாழ்தலை விட  அவ்வாறு  செய்யாமல்  வறுமை   உற்று இறந்து விடுதல்  அற  நூல்கள்  சொல்லும்  ஆக்கத்தை  தரும்.
 
 
 
184 .     கண்  நின்று  கண் அறச்  சொல்லினும்  சொல்லற்க்
              முன் இன்று  பின் நோக்கா ச்  சொல் 
 
 
எதிரே  நின்று  கண் ணோட்டம்  இல்லாமல் கடுமையாகச்  சொன்னாலும் 
சொல்லலாம்  நேரில்  இல்லாத போது பின் விளைவை  ஆராயாத சொல்லைச்  சொல்லக்கூடாது 
                        
 
185 .    அறம் சொல்லும்  நெஞ்சத்தான்  அன்மை  புறம் சொல்லும்   
             புன்மையால்  காணப்படும்
 
 
அறத்தை நல்லதென்று  போற்றும் நெஞ்சம் இல்லாத தன்மை ஒருவன் மற்றவனைப்  பற்றி  புறம் கூறுகின்ற  சிறுமையால்  காணப்படும். 
 
 
 
186 .     பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
             திறன்தெரிந்து கூறப்படும்.
 
 
மற்றவனைப்  பற்றி  புறம் கூறுகின்றவன்  அவனுடைய பழிகள் பலவற்றிலும்   நோகத்தக்கவைகளை  ஆராய்ந்து  கூறிப் பிறரால்  பழிக்கப்படுவான்.  
 
 
187 .      பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
              நட்பாடல் தேற்றா தவர்.
 
 
மகிழும்படியாக  பேசி நட்பு கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை  விட்டு நீங்கும் படியாகப் புறம் கூறி  நண்பரையும்  பிரித்து  விடுவர். 
 
 
188 .     துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
             என்னைகொல் ஏதிலார் மாட்கு.
 
 
நெருங்கி  பழகியவரின்  குற்றத்தையும் புறம் கூறித்  தூற்றும்  இயல்புடையவர்  பழகாத  அயலார்ரிடத்து  என்ன செயவார்ரோ 
 
 
189 .      அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
              புன்சொல் உரைப்பான் பொறை.
 
 
ஒருவர் நேரில் இல்லாதது  கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை ' இவனையும் சுமப்பதே எனக்கு அறம்'    என்று கருதி நிலம் சுமகின்றதோ ?
 
 
190        ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
              தீதுண்டோ மன்னும் உயிற்கு.

 
அயலாருடைய  குற்றத்தைக் காண்பது  போல் தம் குற்றத்தை யும்  காண வல்லவரானால் நிலை பெற்ற  உயிர்  வாழ்க்கைக்குத்  துன்பம்  உண்டோ