Thursday, June 29, 2017

திருக்குறள் அதிகாரம் 48



வலியறிதல்

 

471.
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துமைவலியும் தூக்கிச் செயல்.

 

472.
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்

செல்வார்க்குச் செல்லாதது இல்.

 

473.
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முரிந்தார் பலர்

 

474அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை

வியந்தான் விரைந்து கெடும்.

 

475. பீவிபெம் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

சால மிகுத்துப் பெயின்.

 

476. நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்

உயிர்க்கிறுதி ஆகி விடும்.

 

477. ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்

போற்றி வழங்கு நெறி.

 

478. ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை

போகாறு அகலாக் கடை.

 

479., அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும்.

 

480.உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்

திருக்குறள் அதிகாரம் 47



தெரிந்துசெயல்வகை

 

461.
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

ஊதியமும் சூழ்ந்து செயல்.

 

462.
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல்,

 

463.
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடையார்.

 

464.
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்

ஏதப்பாடு அஞ்சு பவர்

 

465.
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்

பாத்திப் படுப்பதோ ராறு.

 

466.
செயதக்க அல்ல செயக் கெடும் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும்.

 

467.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.

 

468.
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று

போற்றினும் பொத்துப் படும்.

 

469.
நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர்

பண்பறிந் தாற்றாக் கடை.

 

470.
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு

கொள்ளாத கொள்ளாது உலகு.

 

திருக்குறள் அதிகாரம் 46



சிற்றினஞ்சேராமை.

 

451.
சிற்றினம் அஞ்சம் பெருமை சிறுமைதான்

சுற்றமாச் சூழ்ந்து விடு்ம்.

 

452.
நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்ப தாகும் அறிவு.

 

453.
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்

இன்னான் எனப்படும் செயல்.

 

454.
மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு

இனத்துளது ஆகும் அறிவு.

 

455.
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்

இனந்தூய்மை தூவா வரும்.

 

456.
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு

இல்லைநன் றாகா வினை.

 

457.
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும்.

 

458.
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு

இனநலம் ஏமாப் புடைத்து.

 

459,
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்

இநநலத்தின் ஏமாப் புடைத்து.

 

460.
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்

அல்லற் படுப்பதூம் இல்.

 

திருக்குறள் அதிகாரம் 45



பெரியாரைத் துணைக்கோடல்

 

 

441.
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல்.

 

442.
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்.

 

443.
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமாரக் கொளல்.

 

444.
தம்மிற் பெரியார் தமார ஒழுகுதல்

வன்மையு ளெல்லாந் தலை.

 

445.
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்

சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.

 

446.
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்

செற்றார் செயக்கிடந்த தில்.

 

447.
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே

கெடுக்குந் தகைவை யவர்.

 

448.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுபபா ரிலானுங் கெடும்.

 

449.
முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ்

சார்பிலார்க் கில்லை நிலை.

 

450.
பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்.

திருக்குறள் அதிகாரம் 44



குற்றங்கடிதல்

 

431.
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்

பெருக்கம் பெருமித நீர்த்து.

 

432.
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா

உவகையும் ஏதம் இறைக்கு.

 

433.
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்

கொள்வார் பழிநாணு வார்.

 

434.
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே

அற்றந் தரூஉம் பகை,

 

435.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.

 

436.
தன்குற்றம் நீக்கப் பிறர்குற்றங் காண்கிற்பின்

என்குற்ற மாகும் இறைக்கு.

 

437.
செயற்பால செய்யா திவறியான் செல்வம்

உயற்பால தன்றிக் கெடும்.

 

438.
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்

எண்ணப் படுவதொன் றன்று.

 

439.
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நனறி பயவா வினை.

 

440.
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்

ஏதில ஏதிலார் நூல்.

திருக்குறள் அதிகாரம் 43



அறிவுடைமை

 

421.
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்

 

422.
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்ப தறிவு,

 

423.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

 

424.
எண்பொருள் வாகச் செலச் சொல்லித் தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்ப தறிவு.

 

425.
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்

கூம்பலும் இல்ல தறிவு.

 

426.
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வ துறைவ தறிவு.

 

427.
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர்.

 

428.
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.

 

429.
எதிரதாக் காக்கும்  அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய்.

 

430.
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர்.

திருக்குறள் அதிகாரம் 42


கேள்வி

 

411.
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை.

 

412.
செவிக்குண வில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப்படும்.

 

413.
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்

ஆன்ராரோ டொப்பர் நிலத்து..

 

414,
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை.

 

415.
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

 

416.
எனைத்தானும் நல்லவை கேட்கஅனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.

 

417.
பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர்.

 

418.
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி.

 

419.
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய

வாயினராதல் அரிது.

 

420.
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்.

திருக்குறள் அதிகாரம் 41



கல்லாமை


 


401.
அரங்கின்றி வட்டாடி மற்றே நிரம்பிய


நூலின்றிக் கோட்டி கொளல்.




402.
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்


இல்லாதான் பெண்காமுற் றற்று.




403.
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்


சொல்லா திருக்கப் பெறின்.
 


404.
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்


கொள்ளார்  அரிவுடை யார்.




405.
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து


சொல்லாடச் சோர்வு படும்.




406.
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்


களரனையார் கல்லா தவர்.
 


407.
நுண்மான் நுழைபுலம் இல்லான் எழில்நலம்


மண்மான் புனைபாவை யற்று.




408.
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே


கல்லார்கண் பட்ட திரு.


 
409.
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்


கற்றார் அனைத்திலர் பாடு.


 
410.
விலங் கொடு மக்கள் அனையர் இலங்குநூல்


கற்றாரோடு ஏனை யவர்.

திருக்குறள் அதிகாரம் 40



கல்வி

 

391.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

 

392.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரன்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

 

393.
கண்ணுடையரர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்

 

394.
உவப்பத்  தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைகத்தே புலவர் தொழில்.

 

395.
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

கடையரே கல்லா தவர்..

 

396.
தொட்டனைத் தூறும் மணற்கேணி  மாந்தற்குத்

கற்றனைத் தூறும் அறிவு.

 

397.
யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு.

 

398.
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து.

 

399.
தாயின் புறுவது உலகின் புறக் கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்.

 

400.
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருற்கு

மாடல்ல மற்றை யவை.